×

தூத்துக்குடியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும் கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி,மே 9: நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும். திராவிடம் காலாவதியாகிவிட்டது என்று சொல்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள் என்று தூத்துக்குடியில் நடந்த திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5ம் தெருவில் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலௌ வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்றார்.

கூட்டத்தில் திமுக துணைச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ₹15லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னவர் மோடி, ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியதை ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். உரிமைத்தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையை தாண்டி இன்று தமிழகத்தில் பெண்கள் படிப்பில் முன்னேறிவிட்டனர். பெண்கள் பிளஸ்2 வரையாவது படிக்க வேண்டும் என்று கலைஞர் நினைத்த எண்ணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரிபடிப்புக்கு ₹ஆயிரம் வழங்கியதின் மூலம் அதை நிறைவேற்றியுள்ளார். கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய பலரும் மீண்டும் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். பெண்களுக்கான இலவச பஸ் பயணம் மூலம் அவர்களுக்கு ஒருவகையில் விடுதலை கிடைத்துள்ளது. யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியின் மூலம் தங்களது தகுதியை வளர்த்து கொண்டவர்கள் 12 லட்சம் பேர். இப்படி தினம் தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் முதல்வர் ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று ஆளுநர் பேசுகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் முதல்வர் தமிழகத்தில் உள்ள 2200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்துள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது. யாருக்கெல்லாம் என்ன தேவை என்று சிந்திப்பது தான் திராவிடம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த ஆண்டு பட்ஜெட்டில் வாழை, பனைமரம், ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது. மக்களை தேடி மருத்துவம் மூலம் வீட்டிற்கே சென்று ரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து மாத்திரை மருந்து வழங்கும் புதுமையான திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். மீனவர்களின் மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்பட்ட ₹5 ஆயிரம் நிவாரண தொகை ₹ 6ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தை பாதுகாக்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணி மண்டபம் ₹77 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல் தூர் வாருதல் பணிகள் நடைபெறுகின்றன. கோரம்பள்ளம் குளம் ₹12 கோடியில் தூர் வாருதல், உப்பளத்தொழிலாளர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழைகாலங்களில் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநலவாரியமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் 8400 பேர் பயனடைவார்கள். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கடன் பெறுதல் உள்ளிட்டவைகள் மூலம் பயன் பெறுவார்கள். ஆளுநர் பதவி ஒரு அலங்கார பதவிதான் என்று அம்பேத்கர் கூறினார். ஆங்கிலேயர் கொண்டு வந்த பலவற்றை வேண்டாம் என்று கூறும் நிலையில் அவர்கள் கொண்டு வந்த ஆளுநர் பதவியையும் எடுத்துவிடலாம். திராவிடம் காலாவதியாகிவிட்டது என்று சொல்பவர்கள் காலாவதியாகிவிடுவார்கள். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ் குமார்,ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா , வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், தொமுச செயலாளர் மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வழக்கறிஞர் வக்கீல் சுபேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி அந்தோணி கண்ணன், வர்த்தக அணி வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி ஆனந்த் கேபிரியேல்ராஜ், சிவக்குமார் என்ற செல்வின், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, இலக்கிய அணி நலம் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, ரிக்டா மச்சாது, சரண்யா சோமசுந்தரி , ஜெயசீலி சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சக்திவேல், வட்டசெயலாளர்கள் ரவீந்திரன்,கதிரேசன், பாலு, கீதா செல்வமாரியப்பன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநில பேச்சாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.

The post தூத்துக்குடியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும் கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kanilinguli ,Government of Thoothukudi ,Tamil Nadu ,Thuthukudi ,Dra ,Dizhagam Government ,Thoothukudi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...